மீண்டும் ‛சண்டியர்' ஆக வருகிறார் கமல்
‛பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்யு அருண் குமார் அடுத்து நடிகர் கமலின் படத்தை இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் ஆக் ஷன் கதையில் கமலின் 237வது படமாக உருவாகிறது. கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
நாளை (நவ., 7) நடிகர் கமலின் பிறந்தநாள். இதையொட்டி இந்த படத்தின் தலைப்பை இன்று(நவ., 6) அறிவித்துள்ளனர். 5 மணிக்கு வெளியிடுவதாக சொல்லி ஒரு மணிநேர தாமதத்திற்கு பின்னர் 6 மணிக்கு படத்தின் தலைப்பை அறிவித்தனர். படத்திற்கு ‛சண்டியர்' என பெயரிட்டுள்ளனர். காரின் கதவு ஓரம் கையில் துப்பாக்கி உடன் காருக்குள் யாரையோ பார்ப்பது போன்று இதன் போஸ்டர் உள்ளது. காரில் ஆங்காங்கே ரத்த கரையும் உள்ளது. போஸ்டரை பார்க்கையில் இது ஆக் ஷன் கதை என புரிகிறது.
முன்னதாக கடந்த 2004ம் ஆண்டில் கமல் இயக்கம், நடிப்பில் வெளியான ‛விருமாண்டி' படத்திற்கு முதலில் ‛சண்டியர்' என்று தான் பெயரிட்டு இருந்தனர். ஆனால் அப்போது எழுந்த அரசியல் சார்ந்த அழுத்தம் மற்றும் பிரச்னையால் படத்தை தலைப்பை விருமாண்டி என மாற்றினர். 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது படத்திற்கு சண்டியர் என பெயரிட்டுள்ளார் கமல். இந்த முறையாவது பிரச்னைகள் வராமல் இதே தலைப்பில் படம் வெளியாகும் என நம்புலாம்.