மேக்னா ராஜின் 'சங்கீதா பார் அண்ட் ரெஸ்டாரன்ட்' படம் டிசம்பரில் ரிலீஸ்
தமிழில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்த நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் கன்னட நடிகை மேக்னா ராஜ். இவர் தமிழிலும் சில படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார். கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு தனது கணவர் சிரஞ்சீவி சார்ஜா காலமானதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார் மேக்னா ராஜ்.
அந்த வகையில் 'ஜெயிலர் 2' படத்தின் பிரமாண்ட வெற்றியாலும், அந்தப் படத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக நடித்ததாலும் மேக்னா ராஜ் தற்போது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'சங்கீதா பார் அண்ட் ரெஸ்டாரன்ட்' என்கிற திரைப்படம் வரும் டிசம்பரில் ரிலீஸ் செய்யும் விதமாகத் தயாராகியுள்ளது. படத்தின் முதல் பாதி ஒரு பார் பின்னணியிலும், இரண்டாம் பாதி ஒரு ஆன்மிகப் பின்னணியிலும் என இரண்டு வெவ்வேறு வித்தியாசமான கதைக்களங்களில் நகரும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.