ஓம் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசுவாரா தனுஷ்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தனியார் கல்லூரியில் இன்று(நவ., 6) மாலை நடக்கிறது. இந்தப் படத்தில் மம்முட்டி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவிக்கு போலீஸ் வேடம். சென்னையில் நடக்கும் விழாவில் நடிகர் தனுஷ் தனது எதிர்காலம், குறிப்பாக கட்சி, அரசியல் குறித்து ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக அவரிடம் அரசியல் ஆர்வம் அதிகமாகி வருகிறது. தனுஷ் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நற்பணி இயக்க கூட்டங்கள் நடக்கின்றன. சமீபத்தில் கூட பெண் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து தனுஷ் போட்டோ எடுத்தார். பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அவர் நற்பணி இயக்கம் சார்பில் விரைவில் வக்கீல் அணி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தொகுதி வாரியாக டியூசன் சென்டர் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஓம் பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து அவர் கண்டிப்பாக பேசுவார். நேரடியாக பேசாவிட்டாலும் மறைமுகமாக பேச வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கேட்க பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகளும் சென்னை வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு இந்த விழா நடப்பதால் கண்டிப்பாக அரசியல் குறித்து பாசிட்டிவாக பேசுவார். தனது புதிய பயணத்தை அவர் தொடங்க வாய்ப்பு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.