உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷால் வெங்கட், ரெஜினா படப்பிடிப்பு நிறைவு

விஷால் வெங்கட், ரெஜினா படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் விஷால் வெங்கட், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான 'பாம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தையும், 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி' இணையத் தொடரையும் இயக்கியுள்ளார். இப்போது ஒரு படத்தை நிறைவு செய்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா, நாசர், ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர்.

விஷால் வெங்கட் கூறுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் பணியாற்றியது பெருமையான அனுபவம். ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு எனக்கு முழுப் படப்பிடிப்பிலும் ஊக்கமளித்தது. நாசர் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “விஷால் வெங்கட் மிகச்சிறந்த இயக்குனர். அவரது ஐடியா எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். கதை விவாதம் தொடங்கி தயாரிப்பு மற்றும் இப்போது இறுதிக்கட்டப் பணிகள் வரை அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். நாங்கள் அனைவரும் இணைந்து ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !