உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாடிவாசலை தவிர்த்துவிட்டு வேறு படங்களை எடுப்பது ஏன்? : கலைப்புலி தாணு விளக்கம்

வாடிவாசலை தவிர்த்துவிட்டு வேறு படங்களை எடுப்பது ஏன்? : கலைப்புலி தாணு விளக்கம்

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், எஸ். தாணு தயாரிப்பில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' திரைப்படம் சில காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் ஒரே நேரத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' மற்றும் 'ராஜன் வகையறா' ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகிறார். ஏன் வாடிவாசலை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் படங்களைத் தயாரிக்கிறீர்கள்? வாடிவாசல் வருமா, வராதா? எனச் சமீபத்தில் ஒரு பேட்டியில் தாணுவிடம் நேரடியாகவே கேட்கப்பட்டது.

இதற்கு மனம் திறந்து பதிலளித்த அவர், “வாடிவாசல் திரைப்படம் நிச்சயம் வரும். அந்தப் படத்திற்காக ஆரம்பக்கட்டத்தில் தயாரானபோது, அதில் நடிப்பதற்காகப் பழக்கப்பட்ட ஒரு காளை தாக்கியதில் படத் தொழிலாளி ஒருவர் பாதிக்கப்பட்டு, இப்போது வரை அவருக்குச் சிகிச்சை நடைபெறுகிறது.. இதனால் வெற்றிமாறன், 'இனி ஒருவருக்கும் இப்படி நடக்கக் கூடாது; இதேபோன்று ஒரு உயிருள்ள காளை மாடு நமக்கு வேண்டும்' என்று அனிமேட்ரானிக்ஸ் (Animatronics) முறையில் வெளிநாட்டில் அப்படி ஒன்றை உருவாக்க ஏற்பாடு செய்துள்ளார்.. கிட்டத்தட்ட அது இறுதி நிலையில் இருக்கிறது. செலவுகள் நிறைய ஆனாலும் அது மிகத் தத்ரூபமாக இருக்கிறது.

அந்தக் காளை மாட்டுடன் சூர்யா நடிக்கும் காட்சிகள் குழந்தைகள் கூட குதூகலிக்கும் விதமாக இருக்கும். அந்தத் தாமதத்தை ஈடுகட்டுவதற்காகவும், எனக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிரமத்தைச் சரிகட்டுவதற்காகவும் தான் வெற்றிமாறன் தற்போது 'அரசன்' படம் மற்றும் அதற்கு இடையே கிடைத்த இடைவெளியில் 'ராஜன் வகையறா' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அவர் நேரங்களை வீணாக்குபவர் அல்ல; அவசர அவசரமாகப் படங்களை இயக்கும் நபரும் அல்ல. எல்லாமே சரியான திட்டமிடலுடன் தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !