உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேவயானி மகள் நாயகியாக நடிக்கும் 'ப்ளாக் நைட் பாய்ஸ்'

தேவயானி மகள் நாயகியாக நடிக்கும் 'ப்ளாக் நைட் பாய்ஸ்'

நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியரின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், சினிமாவில் நாயகியாக களமிறங்கி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தபடம் திரைக்கு வரும் முன்பே தனது அடுத்த படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்கு 'ப்ளாக் நைட் பாய்ஸ்' என பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக அமல் அஜித் நாயகனாக நடிக்கிறார். டிவி தொடர்களில் நடித்து வந்த இவர் வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். செம்பர் வி. முருகேசன் இயக்குகிறார்.

இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான பேமிலி என்டர்டெய்னராக 'ப்ளாக் நைட் பாய்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !