உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாப் ஹீரோக்கள் படங்களில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகைகள்

டாப் ஹீரோக்கள் படங்களில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகைகள்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் மாறினாலும், பல தலைமுறைகளாக அம்மா கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் நெஞ்சங்களில் ஆழமான இடத்தைப் பிடித்த நடிகைகள் பலர் உண்டு. பாசம், தியாகம், கம்பீரம், நகைச்சுவை எனப் பல பரிமாணங்களில் அதிக திரைப்படங்களில் தாயாக நடித்த முன்னணித் தமிழ் நடிகைகளின் பட்டியல் இதோ...

1. 'ஆச்சி' மனோரமா

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா, அம்மா கதாபாத்திரங்களிலும் மாபெரும் சாதனை படைத்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், சூர்யா எனப் பல தலைமுறை கதாநாயகர்களுக்கு அம்மாவாக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

முக்கிய படங்கள்: சின்ன தம்பி, சின்னக்கவுண்டர், சூரியன், நாட்டாமை, அபூர்வ சகோதரர்கள், மாமன் மகள் உள்ளிட்ட பல படங்களில் பாசமான தாயாகவும், அதே நேரத்தில் நகைச்சுவை கலந்த தாயாகவும் நடித்து அசத்தியவர்.

2. கே. ஆர். விஜயா

'புன்னகை அரசி' என்று அழைக்கப்படும் கே.ஆர்.விஜயா 70களில் கதாநாயகியாக ஜொலித்தவர். 80-கள் மற்றும் 90-களில் குடும்பப் படங்களின் முதன்மைத் தாயாக உருவெடுத்தார். கம்பீரமான, தெய்வ பக்தி நிறைந்த, குடும்பத்தைக் காக்கும் தாயாராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

முக்கிய படங்கள்: வேலைக்காரன், பேர் சொல்லும் பிள்ளை,

3. காந்திமதி

கிராமத்து பின்னணி கொண்ட படங்களிலும், சற்றே முரட்டுத்தனமான அல்லது நகைச்சுவையான தாய் கதாபாத்திரங்களிலும் தனி முத்திரை பதித்தவர் காந்திமதி. சத்தமான பேச்சும், இயல்பான கிராமத்து பாஷையும் இவரது அம்மா கதாபாத்திரங்களின் தனிச்சிறப்பு.

முக்கிய படங்கள் : 16 வயதினிலே, மண் வாசனை, கரகாட்டக்காரன்

4. சுஜாதா

70-களில் கதாநாயகியாக கலக்கிய சுஜாதா, 80-களின் பிற்பகுதியிலும் 90-களிலும் உணர்ச்சிப்பூர்வமான தாய் கதாபாத்திரங்களில் அதிக படங்களில் நடித்தார். தியாகம் மற்றும் சோகம் நிறைந்த தாய் கதாபாத்திரங்களுக்கு மிக கச்சிதமாகப் பொருந்தியவர்.

முக்கிய படங்கள்: உழைப்பாளி, பாபா, அமைதிப்படை, வாலி , வில்லன், செந்தமிழ் பாட்டு, ராஜகுமாரன்

5. ஸ்ரீவித்யா

கம்பீரமான குரல் மற்றும் கண்களாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஸ்ரீவித்யா, 90-களில் முன்னணி கதாநாயகர்களின் தாயாக வலம் வந்தார். பணக்காரத் தாய், போராடும் தாய் எனப் பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ளார்.

முக்கிய படங்கள் : தளபதி, காதலுக்கு மரியாதை , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கண்ணுக்குள் நிலவு, உன்னைத்தேடி

6. சுமித்ரா

70-களில் கதாநாயகியாக அறிமுகமான சுமித்ரா, 80-கள் மற்றும் 90-களில் நூற்றுக்கணக்கான படங்களில் அமைதியான, பாசமிக்க தாயாக நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் பல படங்களில் தாயாக தோன்றியுள்ளார்.

முக்கிய படங்கள் : சிங்காரவேலன், பணக்காரன், சிங்கம், வலிமை

7. ராதிகா சரத்குமார்

80 - 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராதிகா, பின்னாளில் குணச்சித்ர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் இவர் அம்மா வேடத்திலும் அசத்தினார்.

முக்கிய படங்கள் : கிழக்கு சீமையிலே, பசும்பொன், சூரிய வம்சம், தர்மதுரை

8. சரண்யா பொன்வண்ணன்

இன்றைய நவீன தமிழ் சினிமாவின் அனைத்து மாஸ் ஹீரோக்களின் செல்ல அம்மா என்று அழைக்கப்படுபவர் சரண்யா பொன்வண்ணன். வழக்கமான கதறும் அம்மா பாத்திரங்களைத் தாண்டி, மகனுடன் தோழி போல ஜாலியாக பேசும், நகைச்சுவை ததும்பும் இயல்பான அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

முக்கிய படங்கள் : எம்டன் மகன் , களவாணி, முத்துக்கு முத்தாக, வேலையில்லா பட்டதாரி (VIP), ஒரு கல் ஒரு கண்ணாடி (OK OK), கோலமாவு கோகிலா, எதற்கும் துணிந்தவன், மன்னர் வகையறா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !