உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெண்களை மையமாக கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சவால்களை சந்திக்கின்றன : ராதிகா ஆப்தே

பெண்களை மையமாக கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சவால்களை சந்திக்கின்றன : ராதிகா ஆப்தே

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள ‛அக்கா' வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. இந்த தொடர் அக்டோபர் 30-ல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 1980-களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தத் தொடர் 800 ஆண்டுகளாகப் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும், பெர்னூரு என்ற கற்பனை சாம்ராஜ்யத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், கீர்த்தி சுரேஷ் பவானி என்ற கதாபாத்திரத்தில் பெண்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் வேடத்தில் நடிக்க, ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் அந்த சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் வில்லியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே.

இந்நிலையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள ஒரு பேட்டியில், பெண் மையக் கதைகளைக் கொண்ட படங்கள் திரையரங்குகளில் சிறப்பான வெளியீட்டைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‛‛ஆலியா பட் அல்லது தீபிகா படுகோனே போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்தால் தவிர, பாக்ஸ் ஆபிஸில் பெண் மையக் கதைகள் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை ஈர்ப்பது கடினமாக உள்ளது. நான் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது ஓடிடி தளங்களில் வெளியாகிறதா என்பதைக் கருத்தில் கொண்டு படங்களை தேர்ந்தெடுப்பதில்லை. எனது படங்கள் ஏதேனும் ஒரு வழியில் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்றே விரும்புகிறேன்.

நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படம் மிகவும் சிறப்பாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் வணிக ரீதியாக வெற்றி பெறப் போராட வேண்டியிருக்கிறது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற, பெண் நடிகர்களுக்குப் பெரும்பாலும் முன்னணி ஆண் நட்சத்திரங்களின் துணை தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !