உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கனவாக தொடங்​கியது : ஆதி

கனவாக தொடங்​கியது : ஆதி

இசையமைப்​பாள​ராக அறி​முக​மான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017ம் ஆண்டு இயக்கி நடித்த படம், 'மீசைய முறுக்​கு'. இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு ஆதி நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தன் நடிப்பில் வெற்றி பெற்ற மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்​படத்​தில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் என 3 பேர் கதா​நாயகி​களாக நடித்துள்ளனர்.

மேலும் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் நடித்துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா சார்​பில் குஷ்பு சுந்​தர், ஏ.சி.எஸ். அருண்​கு​மார் தயாரித்துள்ளனர். செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகிறது

படம் குறித்து ஆதி வெளியிட்டுள்ள பதிவில் “ஒரு கனவாகத் தொடங்​கியது, இன்று கோடிக்​கணக்​கான மக்​களின் உணர்​வாக மாறி​யுள்​ளது. அந்த மாயா ஜாலத்தை மீண்​டும் ஒரு முறை 'மீசைய முறுக்கு 2' மூலம் அனுபவிக்க வேண்​டிய நேரம் வந்து விட்​டது” என்று தெரிவித்​துள்​ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !