உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம்! 'டிராகன்' படப்பிடிப்பு நிறுத்தம்!

ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம்! 'டிராகன்' படப்பிடிப்பு நிறுத்தம்!


பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் தற்போது நடித்து வரும் படம் 'டிராகன்'. இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து நேற்று அவருக்கு மருத்துவர்கள் ஜே.மதுசூதன் ராவ், ஆர்.ஏ.பூர்ணசந்திர தேஜஸ்வி ஆகியோர் சிகிச்சை அளித்துள்ளனர். அதோடு, காயம் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைவதற்காக 6 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதனால் தற்போது டிராகன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆரின் உடல்நிலை தேறிய பிறகு இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளர்கள். 2027ம் ஆண்டு ஜூனில் திரைக்கு வரவுள்ள டிராகன் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ருக்மணி வசந்த், அணில் கபூர், பிஜு மேனன், குரு சோமசுந்தரம், குஷ்பூ சுந்தர் ஆகியோர் முக்கியம் வேடங்களில் நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !