கங்கனாவின் பார்லிமென்ட் பேச்சுக்கு நான் ரசிகை ; ஐஸ்வர்ய லட்சுமி
பாலிவுட் நடிகையும் லோக்சபா எம்பியுமான கங்கனா ரணாவத், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். நடிகையாக இருக்கும் போதும் சரி, தற்போது அரசியல்வாதியாக மாறிய பிறகும் சரி, தனது கருத்துக்களை துணிச்சலாகக் கூறுபவர். குறிப்பாக சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் போராடி தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இந்த குணங்களை எல்லாம் பார்த்து அவருக்கு ரசிகையாகவே மாறிவிட்டேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்று நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார்.
இது குறித்து கூறும்போது, அவரை ஒரு 'ஜீனியஸ்' என்று வர்ணித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமி, கங்கனா ரணாவத் தனது சொந்த முயற்சியால் நன்றாகப் பேச கற்றுக்கொண்டு, ஒரு சிறந்த பேச்சாளராக உருவெடுத்த விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். குறிப்பாக, பார்லிமென்டில் அவர் வழங்கும் உரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று புகழ்ந்துள்ளார்.