மும்பை பாந்த்ராவில் பூஜா ஹெக்டே கட்டிய பிரமாண்ட வீடு!
விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தை அடுத்து 'ஜனநாயகன்' படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் 'காஞ்சனா-4' படம் மற்றும் துல்கர் சல்மானுடன் 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ராவில் கடற்கரையை பார்த்தபடி ஒரு பிரமாண்டமான வீட்டை கட்டி இருக்கிறார் பூஜா ஹெக்டே. 4000 சதுர அடி கொண்ட இந்த வீடு 50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாம்.
இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் பூஜாஹெக்டே, 'இந்த வீட்டை எனக்கு பிடித்த மாதிரி பார்த்து பார்த்து கட்டி இருக்கிறேன். குறிப்பாக வீட்டுக்குள் வெளிக்காற்றும், சூரிய ஒளியும் வந்து செல்லும் வகையில் வடிவமைத்து இருக்கிறேன். விலை உயர்ந்த மார்பில்ஸ் மற்றும் பளிங்கு கற்களைக் கொண்டு இந்த வீட்டை செதுக்கி உள்ளேன்' என்று இந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் பூஜாஹெக்டே.