கே.ஜி.எப் நாயகனுடன் இணைந்து நடிக்க ஆர்வத்தில் இருக்கும் ரன்பீர் கபூர்!
ஹிந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் குறித்து ரன்பீர் கபூர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், யஷ் உடன் தான் மோதும் முக்கியக் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், யாஷ் குறித்துப் பேசிய ரன்பீர், 'கேஜிஎப் படத்தில் இருந்தே அவரது நடிப்பிற்கு நான் ஒரு தீவிர ரசிகர். அதனால் யஷூடன் இணைந்து நடிப்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதோடு, ராவணன் கதாபாத்திரத்திற்கு யஷ் ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த பரிமாணத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறி, அவரது நடிப்பைப் பாராட்டியுள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த ராமாயணா படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் காட்சி அமைப்புகளுக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.