உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாலிமேரா-3' படத்தில் நெகட்டிவ் ரோலில் அர்ஜுன்!

'பாலிமேரா-3' படத்தில் நெகட்டிவ் ரோலில் அர்ஜுன்!


தெலுங்கில் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த 2021ல் வெளியான திரில்லர் படம் 'பாலிமேரா'. அதையடுத்து 2023ல் அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பாலிமேரா படத்தின் மூன்றாம் பாகத்தையும் தொடங்கியுள்ளார் அனில் விஸ்வநாத்.

இந்த பாலிமேரா-3 பாகத்தில் நடிகர் அர்ஜூன் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் ஒரு எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார். கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி, திரைக்கதையின் சுவாரசியத்தையும் சஸ்பென்ஸையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்யம் ராஜேஷ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

கிராமத்துப் பின்னணி, பிளாக் மேஜிக் மற்றும் எதிர்பார்க்காத திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை காரணமாக இப்படத்தின் முந்தைய பாகங்கள் வெற்றி பெற்றன. அந்த வகையில் இந்த 3வது பாகம் எவ்வாறு அமையப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாலிமேரா- 3 படத்தின் தொடக்கப் பூஜை ஜூலை 27ம் தேதியான நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !