உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை படத்தில் அரசியல் இல்லை : சொல்கிறார் இயக்குனர்

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை படத்தில் அரசியல் இல்லை : சொல்கிறார் இயக்குனர்

இந்தியாவில் பிறந்த முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவர் ஜிடி நாயுடு. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்பட்டார். அவரது வாழ்க்கை கதை தற்போது 'ஜிடிஎன்' என்ற பெயரில் படமாக தயாராகி உள்ளது. ஜி.டி.​நா​யுடு கதா​பாத்​திரத்​தில் மாதவன் நடித்​துள்ளார். 'பைவ் ஸ்டார்' படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குனராக மாறியிருக்கும் கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார் இயக்கி இருக்​கிறார்.

'ராக்​கெட்​ரி' படத்​தைத் தயாரித்த வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் சார்​பில் விஜய் மூலன், வர்​கீஸ் மூலன் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்​பில் ஆர்​.​மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்​துள்ளனர்.

படம் பற்றி இயக்​குநர் கிருஷ்ணகு​மார் கூறியிருப்பதாவது : பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஜிடி நாயுடு குறித்து ஆர்வம் ஏற்பட்டது. திரைப்பட இயக்குனரான பிறகு அவரது வாழ்க்கை கதையை படமாக்க வேண்டும் என்று விரும்பினேன். கொரோனா காலத்தில் இதன் திரைக்கதை எழுதி முடித்துவிட்டு அதனை ஜிடி நாயுடுவின் குடும்பத்திடம் காட்டி ஒப்புதல் பெற்றேன் அவர்களும் நிறைய வழிகளில் உதவி செய்தார்கள் அதையும் படத்தில் பயன்படுத்திக் கொண்டேன்.

இந்த படத்தில் ஜிடி நாயுடுவாக நடிக்க மாதவன் தான் சரியான தேர்வு என்று அவரை அணுகினேன் ஆனால் அவர் அப்போதுதான் 'ராக்கெட்டரி ' படத்தை நடித்து முடித்து இருந்தார். அதிலும் அவர் ஒரு விஞ்ஞானியாக தான் நடித்திருந்தார். அதனால் இதில் மீண்டும் விஞ்ஞானியாக நடிக்க தயக்கம் காட்டினார். ஆனால் நான் எழுதிய திரைகதையும் படத்திற்கான உழைப்பும் அவரை கவர்ந்து நடிக்க சம்மதித்ததோடு ஜிடி நாயுடுவாகவே சினிமாவில் வாழ்ந்து காட்டியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜிடி நாயுடுவின் முழு கதையும் இடம் பெறாது. அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய போராட்டமும், அதில் அவர் சந்தித்த விஷயங்களும் அதை வென்று காட்டிய விதமும் படத்தில் இருக்கும்.

ஜிடி நாயுடு விஞ்ஞானத்தை விட மனிதநேயத்தையே அதிகம் விரும்பினார் நேசித்தார் என்பது படத்தின் மையக்கருவாக இருக்கும். அவரது நண்பராக சத்யராஜ் நடித்துள்ளார். ஜிடி நாயுடு காலத்தில் வாழ்ந்த ராமசாமி நாயக்கரும், எம்ஆர் ராதாவும் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். அந்த நட்பு படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் அவர்களுக்குள் இருந்த அரசியல் எதுவும் படத்தில் இடம் பெறாது என்கிறார் கிருஷ்ணகுமார்.

இந்தப் படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளிவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !