உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமீபத்தில் நான் மிகவும் ரசித்து பார்த்த தமிழ்ப்படம் இதுதான் : ஜான்வி கபூர்

சமீபத்தில் நான் மிகவும் ரசித்து பார்த்த தமிழ்ப்படம் இதுதான் : ஜான்வி கபூர்

தெலுங்கில் நடித்த பெத்தி படம் தொடர்பான விமர்சனங்களில் பரபரப்பாக பேசப்பட்ட ஜான்வி கபூர், சமீபத்திய கலந்துரையாடலின்போது, தான் பார்த்த சமீபத்திய தமிழ்ப் படம் குறித்து பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் பார்த்த தமிழ் பட அனுபவம் குறித்து கேட்டபோது, அர்ஜுன், பிரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடித்த பிளாஸ்ட் படத்தை ஜான்வி குறிப்பிட்டார்.

ஒரு பெரிய நட்சத்திரத்தின் படத்தைக் குறிப்பிடாமல், ஒப்பீட்டளவில் குறைந்த வரவேற்பைப் பெற்ற பிளாஸ்ட் படத்தைக் குறிப்பிட்டதால், ஜான்வியின் இந்த பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அவரது இந்த பதில் பிளாஸ்ட் படத்திற்கும் அதன் கதாநாயகிக்கும் புதிய கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

மேலும், வெற்றிமாறனின் படங்களைப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவரது அடுத்தகட்ட வேலைப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜான்வி. வரும் நாட்களில் தமிழ் படங்களில் நடிப்பது சம்பந்தமான முயற்சிகளில் ஜான்வி கபூர் ஈடுபடுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !