உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாலமன் பாப்பையா இல்லாத ஒரு தீபாவளி, பொங்கலை நினைத்துப் பார்க்க முடியாது : தனுஷ்

சாலமன் பாப்பையா இல்லாத ஒரு தீபாவளி, பொங்கலை நினைத்துப் பார்க்க முடியாது : தனுஷ்

பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞர்மான சாலமன் பாப்பையா மறைந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் பட்டிமன்றத்தின் மூலம் புகழ்பெற்ற மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவை நினைக்காமல், பொங்கல் அல்லது தீபாவளி போன்ற ஒரு பண்டிகை நாள் தனக்கு முழுமையடையாது என்று நடிகர் தனுஷ் ஞாயிற்றுக்கிழமையன்று பகிர்ந்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், தமிழை வணங்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா. சிறுவயதிலிருந்தே அவரைப் பார்க்காத ஒரு தீபாவளியையோ அல்லது பொங்கலையோ என்னால் நினைத்துப் பார்க்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் , சாலமன் பாப்பையா நடுவராக இருந்த பட்டிமன்றங்களில் பங்கேற்ற ராஜா என்பவரை, சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாகத் தான் கருதியதாகவும் தெரிவித்துள்ளார். பாப்பையா சார், உங்கள் குரலும் நினைவுகளும் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழும் என்று கூறி தனுஷ் தனது பதிவை முடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் சாலமன் பாப்பையாவை தனுஷ் நினைவுகூர்வது இது முதல் முறையல்ல. கடந்த 2016ம் ஆண்டிலும், தீபாவளியன்று சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தைப் பார்த்ததாக நடிகர் தனுஷ் கூறியிருந்தார். சாலமன் பாப்பையா பட்டிமன்றத்துடன் மீண்டும் ஒரு பண்டிகை. சில விஷயங்கள் என்றும் மாறுவதில்லை என்று அந்த சமயத்தில் சிறுவயது நினைவுகள் என்ற ஹேஷ்டேக்குடன் தனுஷ் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலமன் பாப்பையாவுடன் இணைந்து தனுஷ் எந்தப் படத்திலும் நடித்ததில்லை என்றாலும், இந்த அறிஞர் மற்றும் பேச்சாளர் குறித்த அவரது பதிவுகள் இருவருக்கும் இடையே இருந்த ஆழமான பிணைப்பைக் காட்டுகின்றன. மேலும், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் மற்றும் சிவாஜி போன்ற படங்களில் சாலமன் பாப்பையா நடித்திருந்தார்.

குறிப்பாக, சிவாஜி படத்தில் தனது மகள்களாக நடித்த கதாபாத்திரங்களை உருவக் கேலி மற்றும் நிறம் சார்ந்த வசனங்கள் அமைந்த காட்சியில் நடித்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதற்காகப் பொறுப்பேற்று, அத்தகைய காட்சியில் நடித்ததற்காக தொலைக்காட்சிகளில் பலமுறை பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !