உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி வசூல் : சூர்யா புதிய சாதனை

ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி வசூல் : சூர்யா புதிய சாதனை

தமிழ் சினிமாவில் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி வசூலைப் பெற்ற முதல் நடிகராக சூர்யா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த ஆண்டில் சூர்யா நடித்து முதலில் 'கருப்பு' படம் மே மாதம் வெளியானது. அப்படம் 340 கோடி வசூலைக் கடந்தது. அதற்கடுத்து 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. அப்படமும் 240 கோடி வசூலைக் கடந்தது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் நவம்பர் 6ம் தேதி 'சீன்' படம் வெளியானது. இப்படம் 145 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி வசூலைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு வேறு எந்த ஒரு நடிகரும் இப்படி ஒரு வசூல் சாதனையைப் பெற்றதில்லை.

தனது மூன்று படங்களின் மூலம் இந்த வருடத்தில் இதுவரையில் சூர்யா பெற்றுத் தந்த மொத்த வசூல் தொகை 725 கோடி. கடந்த வாரம் வெளியான 'சீன்' படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த வசூல் இன்னும் அதிகமாகலாம்.

'ஜெயிலர் 2' படம் மூலம் ரஜினிகாந்த் இந்த ஆண்டில் தந்துள்ள வசூல் 820 கோடிக்கும் அதிகம். அவருக்கடுத்து வசூலில் சூர்யா இடம் பெறலாம், இல்லை அதை விடவும் சில கோடிகள் கூடுதலாகப் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !