ரூ.500 கோடி வசூல் கடந்த 'ராமாயணா'
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் நவம்பர் 5ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'ராமாயணா'. வசூல் குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை தயாரிப்பு நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை. இப்படம் கடந்த நான்கு நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக ஹிந்தியில் 200 கோடி வசூலை இந்தப் படம் நெருங்கியுள்ளது. வெளிநாடுகளில் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 50 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 35 கோடி, தமிழகத்தில் 14 கோடி, கேரளாவில் 13 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என்கிறார்கள்.
சுமார் 2000 கோடி செலவில் இந்த முதல் பாகம் தயாராகியிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகின. உலக அளவிலான வியாபாரம் மட்டும் 800 கோடிக்கும் அதிகமாக நடந்திருக்கிறதென்றும், அதைப் பெற 1600 கோடிக்கும் அதிகமாக இப்படம் தியேட்டர்களில் வசூலித்தாக வேண்டும் என்கிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் கடந்த ஒரு மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.