உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 35 சர்வதேச திரைப்பட விழாக்கள்... 4 விருதுகள் : கவனம் ஈர்க்கும் 'வன மடி'

35 சர்வதேச திரைப்பட விழாக்கள்... 4 விருதுகள் : கவனம் ஈர்க்கும் 'வன மடி'

‛மாத்தி யோசி', 'தொட்டால் தொடரும்', 'அழகு குட்டி செல்லம்', 'புகைப்படம்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குனராக அறிமுகமாகி உள்ள படம் ‛வன மடி'. முற்றிலும் முதுமுகங்கள் நடித்துள்ளனர்.

கால மாற்றங்கள் நம்மையும், நம் சந்ததிகளையும் ஒரு வலிமையான சுழிக்குள் இழுத்து போய் கொண்டிருக்கிறது. இயல்பான மனிதர்கள் தங்களுக்குள் அன்பும், தேடுதலும் இயந்திரகதிக்குள் ஒளிந்து கொண்டுவிட்டன என்பதை தனது எளிய மொழியில் விஜய் ஆம்ஸ்ட்ராங் சொல்லியிருப்பதே 'வன மடி' படத்தின் கரு. அமெரிக்காவில் வசிக்கும் ராலே ராஜன் இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் மால்குடி சுபா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

படம் முழுமையாகத் தயாராகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 7 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, அவற்றில் 4 திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளையும் வென்றுள்ளது. அடுத்ததாக கோவாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இந்தியன் பனோரமாவிலும் கலந்து கொள்ள உள்ளது.

இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங் படம் பற்றிக் கூறும்போது, “இப்படம் இயற்கை சம்பந்தப்பட்டது. தாய் மடி என்பது போல வன மடி என்ற பெயரை வைத்துள்ளோம். இந்தப் படம் எதிர்காலத் தலைமுறைக்கான படம் மட்டுமல்ல, குறிப்பாக அனைத்துப் பெற்றோர்களுக்குமான படமும் கூட. திரைப்பட விழாக்களில் இப்படம் முக்கிய கவனம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !