உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசிகுமாரின் வெப்சீரிஸ் ஆகஸ்ட் 7ல் வெளியாகிறது

சசிகுமாரின் வெப்சீரிஸ் ஆகஸ்ட் 7ல் வெளியாகிறது

சசிகுமார் நடித்துள்ள வெப் சீரிஸ் 'வதந்தி 2 '. ஆணட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் - காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். சசிகுமார் கதை நாயகனாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன், நந்தகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் ப்ரைம் வீடியோ தளத்தில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் கிரைம் திரில்லர் ஜார்னரில் உருவாகி உள்ளது. இதில் சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியில் இது உருவாகியுள்ளது.

நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, 'மணி' என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !