உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சோகம் : கேஸ் வெடித்து ஒருவர் பலி, மூவர் படுகாயம்

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சோகம் : கேஸ் வெடித்து ஒருவர் பலி, மூவர் படுகாயம்

எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கி, நடிக்கும் ‛கில்லர்' படத்தின் படப்பிடிப்பில் கேஸ் வெடித்ததில் ஒருவர் பலியானார், மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் படப்பிடிப்பு நடக்கிறது. வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பிய போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.



இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் மதுரவாயல் பகுதியை சேர்ந்த மதன், 26, என்ற நபர் உயிரிழந்து இருக்கிறார். மேலும் தினகரன்,24, சூர்யா, 23, சக்திவேல், 27, ஆகிய 3 பேருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவர் கைது
எஸ்ஜே சூர்யாவின் ‛கில்லர்' படப்பிடிப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தில் கேஸ் சப்ளை ஒப்பந்தகாரர் ராமு மற்றும் படப்பிடிப்பு மேலாளர் ஆறுமுகம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !