உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்'

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'அங்கீகாரம்'


ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண் முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'அங்கீகாரம்'. அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பா.ரஞ்சித்திடம் துணை இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது “பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் மறைக்கப்பட்ட அவலங்களை பேசுகிறது. தனக்கான அங்கீகாரத்திற்காக நீதிமன்றம் வரை சென்று போராடும் ஒரு தடகள வீரனின் கதையை உணர்ச்சிகரமாக சொல்கிறோம். சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் நீதிமன்ற வளாக செட் நிஜத் தோற்றம் போல அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !