முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆர்.ஜே.பாலாஜி
மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள படம் கருப்பு. சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், சுவாசிகா, சிவதா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்தப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார் . கடந்த மே 15ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் 300 கோடியை தாண்டி தொடர்ந்து வசூலித்து வருகிறது.
இந்நிலையில் ஆர்.ஜே .பாலாஜிக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வர் விஜயையும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார். விஜய்யை தான் சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஆர். ஜே .பாலாஜி.
அதோடு, ‛‛கருப்பு படம் தொடங்கியது இவரிடம் இருந்துதான் என்றும் பதிவிட்டுள்ள அவர், விஜய் சாரை முதல்வராக பார்த்தது நம்ப முடியாத தருணம். அதே அன்பு, பணிவு, அமைதி ஒரு அன்பான முதல்வரை சந்தித்து ஆசி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.