உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகளுக்கு திருமணம் : முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கிய குஷ்பு குடும்பத்தினர்

மகளுக்கு திருமணம் : முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கிய குஷ்பு குடும்பத்தினர்

இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியரின் மூத்த மகளான அவந்திகாவிற்கு திருமணம் முடிவாகி உள்ளது. திருமண அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு சமீபத்தில் நேரில் வழங்கினார் குஷ்பு மற்றும் குடும்பத்தினர். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய்யை இரண்டாவது முறையாக இன்று சந்தித்து மகள் திருமண அழைப்பிதழ் வழங்கி உள்ளார். அவருடன் கணவர் குஷ்பு மகள்கள் மற்றும் மருமகனும் உடன் சென்றுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், ‛‛எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத நாள்! எங்களது அன்பிற்குரிய சகோதரரும், தமிழகத்தின் முதல்வருமான விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகள் மற்றும் ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினோம்.



​அவரைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் இதயம் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிறைகிறது. குழந்தைகள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்து, அவரிடமிருந்து தங்கள் கண்களை எடுக்கவே இல்லை. தனது பிஸியான பணிச்சுமைக்கு இடையிலும், எப்பொழுதும் போல அதே பாசம், அரவணைப்பு மற்றும் அழகான புன்னகையோடு எங்களை வரவேற்றார். ​உங்கள் பொன்னான நேரம், அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்கு மிக்க நன்றி சகோதரா. இதன் மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

குஷ்பு - சுந்தர் சி தம்பதியினர் திருமண அழைப்பிதழ் வழங்கி வந்தாலும் எப்போது திருமணம் எந்த இடத்தில் திருமணம், மாப்பிள்ளை விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !