உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதை முழுமை செய்யப்படாததால் விஷால் படத்தை விட்டு வெளியேறிய தயாரிப்பாளர்

கதை முழுமை செய்யப்படாததால் விஷால் படத்தை விட்டு வெளியேறிய தயாரிப்பாளர்

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகுடம் திரைப்படம் வெளியானது. அவரது டைரக்சனில் உருவான முதல் படம் என்கிற எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியானாலும் தோல்விப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் புருஷன் என்கிற படத்தில் நடிக்கிறார் விஷால். இன்னொரு பக்கம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லலித்குமார் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது லலித்குமார் அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.

காரணம் விஷால் ஷூட்டிங் எப்போது போகலாம் என்று தயாரிப்பாளரிடம் அவ்வப்போது வலியுறுத்தினாலும் முழுமையான பவுண்ட் ஸ்கிரிப்ட் எனக்கு வராமல் படப்பிடிப்பை நான் தொடங்க மாட்டேன் என கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டாராம் லலித்குமார்.. இதனால் விஷால் அப்படி என்றால் நான் இந்த படத்தை வேறு தயாரிப்பாளர் மூலமாக எடுத்துக் கொள்கிறேன் என்று கூற அதற்கு சம்மதித்து அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம் லலித்குமார்.

ஆனால் தற்போது புதிய தயாரிப்பாளர் கிடைக்காமல் விஷால் தவித்து வருகிறார் என்றும், அதற்கு பேசாமல் முழுமையான ஸ்கிரிப்ட்டை தயார் செய்து விட்டு லலித்குமார் தயாரிப்பிலேயே இந்த படத்தை உருவாக்குவதில் அவருக்கு என்ன கஷ்டம் என்று திரையுலகில் அவரைப் பற்றி அறிந்தவர்களே வருத்தத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !