உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆலியா பட்டுக்கு வீட்டை விற்றுவிட்டு பத்து வருடமாக வாடகை வீட்டில் வசிக்கும் அனுபம் கெர்

ஆலியா பட்டுக்கு வீட்டை விற்றுவிட்டு பத்து வருடமாக வாடகை வீட்டில் வசிக்கும் அனுபம் கெர்

பாலிவுட் நடிகர் அனுபம் கெர் கடந்த 42 வருடங்களுக்கு மேலாக பாலிவுட் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராமாயணா திரைப்படத்தில் ஜடாயு கதாபாத்திரத்திற்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 400 முதல் 500 கோடி இவரது சொத்து மதிப்பு இருக்கும் என்று கூகுளில் சில தவறான தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய அனுபம் கெர், தான் இப்போதும் வாடகை வீட்டில் வசிப்பதாக ஆச்சரியமான தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இணையத்தில் உள்ள தனது சொத்து மதிப்பு 400 முதல் 500 கோடி என சொல்லப்படுகிறது, அதில் 10% கூட என்னிடம் இல்லை. அதுமட்டுமல்ல கடந்த 10 வருடங்களுக்கு முன்பே என்னுடைய வீட்டை நடிகை ஆலியா பட்டுக்கு விற்றுவிட்டு நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.. அந்த காலகட்டத்தில் எனது மனைவி கிரண் கெர் பார்லிமென்ட் எம்பியாகி சண்டிகருக்கு சென்றதால் எனக்கு வாடகை வீட்டில் வசிப்பது சவுகரியமாக மாறிவிட்டது.

வாடகை வீட்டில் வசித்தாலும் வாழ்க்கையின் வசதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை.. சிறந்த உணவகங்களுக்கு சென்று சாப்பிடுகிறேன். வசதியாக பயணம் செய்கிறேன். சிறந்த ஹோட்டல்களில் தங்குகிறேன்.. ஆனால் பேராசைக்கு முடிவே இல்லை என்பதால் இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !