மருத்துவப் பின்னணியில் நடக்கும் கிரைம் திரில்லர் தான் ‛நிறம்'
ADDED : 16 minutes ago
பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் பிக்பாஸ் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள படம் நிறம். இதில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப் நாயகிகளாக நடிக்க, நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“மருத்துவத் துறையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு” உருவாகியுள்ள இந்தபடம், மருத்துவப் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் நிகழும் முக்கியமான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தவாரம் நவம்பர் 27-ம் தேதி படம் வெளியாகிறது.