உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா : வட அமெரிக்காவில் புதிய சாதனை

ராமாயணா : வட அமெரிக்காவில் புதிய சாதனை

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'ராமாயணா' படம் வட அமெரிக்காவில் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரையில் அங்கு வெளியான இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 29 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 265 கோடி. இந்த வருடத்தில் இதற்கு முன்பு வெளியான 'துரந்தர் 2' படம் வசூலித்திருந்த 28.1 மில்லியன் யுஎஸ் டாலரை சாதனையை 'ராமாயணா' முறியடித்துள்ளது.

படம் வெளியான 20 நாட்களில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. வட அமெரிக்கா என்பது அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவை உள்ளடக்கியது.

'ராமாயணா' படம் 30 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !