உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட செழியனின் 'காகித மலர்'

டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட செழியனின் 'காகித மலர்'

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் செழியன் சில மாதங்களுக்கு முன் காலமானார். இவரது ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான படம் ‛காகித மலர்'. இந்தபடம் 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் ஏசியன் பியூச்சர் பிரிவில் உலகத் திரையிடலுக்காக தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இதில் பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்கள் ஒலித்தன.

திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குத் தமிழில் பிரேமா செழியனும், ஆங்கிலத்தில் அதிதா செழியனும் பதிலளித்தனர். நிகழ்ச்சியின் போது அவர்களின் பதில்கள் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா கூறியதாவது: “டிஜிட்டல் யுகத்தில் குறைந்த பட்ஜெட்டில்கூட மிகச் சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும். திரைப்பட உலகில் ரத்தினங்களைப் போன்ற அருமையான படைப்புகளை நாங்கள் கண்டிருக்கிறோம். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் செழியனின் 'காகித மலர்'. இந்தத் திரைப்படம் உலகத் தரத்தைக் கொண்ட படைப்பாக அமைந்துள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !