உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தர்மன்' படத்தில் ராம் பொத்தினேனி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'தர்மன்' படத்தில் ராம் பொத்தினேனி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகிபாபு, நயன்தாரா, ஸ்ரீலீலா என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தர்மன் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணைந்துள்ளதாக தகவல் பரவியது. ராஷி கண்ணாவும், அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பின்னர் டெலிட் செய்தார். இந்த நிலையில் ராம் பொத்தினேனி நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தீபாவளியை முன்னிட்டு தர்மன் படத்தின் ரஜினியின் லுக் உடனான புதிய போஸ்டரையும் வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !