வெற்றிக்காக ஏங்கும் 4 பேர் : தீபாவளி வெற்றி எப்படியோ?
தீபாவளிக்கு ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்த ராமாயணா, சூர்யா, நஸ்ரியா நடித்த சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் நடித்த 4 பேர் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். சமீபகாலமாக நயன்தாரா நடித்த, குறிப்பாக அவர் கதைநாயகியா நடித்த பல படங்கள் ஓடவில்லை. இந்த படம் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. அவரின் ரவுடிபிக்சர்ஸ் நிறுவனம் படத்தில் பார்ட்னரும் கூட. அதனால் வெற்றிக்காக ஏங்குகிறார். பட நிகழ்ச்சிகளுக்கு வராதவர் நேற்று சென்னை காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லி ஆக நடித்த ரெஜினாவும் வெற்றியை நோக்கி காத்திருக்கிறார். பல படங்களில் ஹீரோயினாக நடித்த பின் இதில் வில்லி ஆகி இருக்கிறார். பவர்புல் கேரக்டர் என்பதால் வில்லி ஆனதாக தகவல்.
சீன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நஸ்ரியா, 12 ஆண்டுகளுக்குபின் தமிழில் நடித்துள்ளார். ரீ என்ட்ரி வெற்றிகரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். ராமாயணா படத்தில் சீதையாக நடித்துள்ள சாய்பல்லவி படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார். சீதையாக நடிக்க அவரிக்கு நிறைய எதிர்ப்புகள், விமர்சனங்கள். அதனால் அவர் தன் நடிப்பு மூலம் வெற்றியை தருவோம் என நம்புகிறார். ஆக நாலுபேரும் வெற்றிக்காக நம்பிகையுடன் காத்திருக்கிறார்கள்.