கிர்த்தி ஷெட்டியின் ஹிந்தி படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ
ADDED : 5 hours ago
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் ஒரு ரவுண்ட் வந்துவிட்ட நடிகை கிர்த்தி ஷெட்டி இப்போது பாலிவுட்டில் 'ஹம் தேரே பியார் மேய்ன்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். காதல் சார்ந்த பொழுதுபோக்கு கதையில் உருவாகும் இதை விதி கோட்கோன்கர் இயக்குகிறார்.
இதில் முக்கிய வேடத்தில் நடிக்க பாக்யஸ்ரீ இணைந்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியன்ஷு சாட்டர்ஜி நடிக்கிறார். 90களில் பிரபலமான இவர் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு ரோலில் தோன்றுகிறார். இதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. காதல் படங்களில் நன்கு அறியப்பட்ட இந்த இரு நட்சத்திரங்களின் கூட்டணி, வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.