உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்ஜிஆரோடு நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ரட், 83 வயதில் தற்கொலை

எம்ஜிஆரோடு நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ரட், 83 வயதில் தற்கொலை


தாய்லாந்து நாட்டை சேர்ந்த மேட்டா ரூங்ராட் கிழக்காசிய நாடுகளில் பிரபலமான நடிகை. தாய்லாந்து, சீன, கொரிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவரை 'ஆசியாவின் கருப்பு முத்து' என்று செல்லமாக அழைப்பார்கள்.

1973ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அவர் நடித்த 'பச்சைக்கிளி முத்துசரம்' பாடல் இப்போதும் பிரபலம்.

83 வயதான மேட்டா, நீண்ட காலமாக அல்சைமர் (ஞாபகமறதி நோய்) மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பேங்காக் நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். அவர் வீட்டின் கதவு சில நாட்களாக திறக்கப்படாததால் நேற்று போலீசார் வந்து கதவை உடைத்து திறந்தனர். அப்போது அவர் தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேட்டா மறைவுக்கு தாய்லாந்து திரைத்துறையினரும், தமிழ் சினிமா ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !