உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 ஆண்டு கால தமிழ் சினிமாவில் 'ஜெயிலர் 2' புதிய சாதனை: 800 கோடி வசூலை தாண்டியது

100 ஆண்டு கால தமிழ் சினிமாவில் 'ஜெயிலர் 2' புதிய சாதனை: 800 கோடி வசூலை தாண்டியது


தமிழகத்தில் 220 கோடி, வெளிநாட்டில் 273 கோடி, ஆந்திரா தெலுங்கானாவில் 100 கோடி கேரளாவில் 79 கோடி கர்நாடகாவில் 93 கோடி என திரையிட்ட அனைத்து இடங்களிலும் புதிய சாதனை படைத்துள்ளது 'ஜெயிலர் 2' திரைப்படம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என தான் மட்டுமே என ரஜினிகாந்த் நிரூபித்துள்ளார்.

ஜெயிலர் 2 படம் தீபாவளிக்கும் தொடர்ச்சியாக பல தியேட்டர்களில் ஓடுகிறது. இதனால் படத்தின் வசூல் 900 கோடி அளவில் இந்த மாதம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் '2.0' படம் அதிக வசூல் என்ற சாதனை படைத்தது. அதை ரஜினிகாந்தின் அடுத்த படமே முறியடித்துள்ளது. 'ஜெயிலர் 2' படத்தின் வசூல், இந்திய தென்னிந்திய அளவில் தமிழ் படத்திற்கு புதிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !