உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகளின் காதலைத் தடுக்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே சென்ற பெற்றோர்

மகளின் காதலைத் தடுக்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே சென்ற பெற்றோர்

மலையாளத்தில் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் மோகன்லால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற சீசன்களை விட கூடுதலாக இந்த சீசனில் பல பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பெண் போட்டியாளரான நேஹா பாத்திமா, சக போட்டியாளரான தஷி எனப்படும் சந்தோஷ் ராஜ் மீது தனது காதலை சமீபநாட்களில் வெளிப்படுத்தி வருகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மகளின் காதலைக் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.. மேலும், போட்டியை விட்டு வெளியேறுமாறு மகள் நேஹா பாத்திமாவிடம் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தான் காதலிப்பது தவறா என்று நேஹா பாத்திமா கண்ணீர் விட்டுள்ளார்.. மோகன்லால் தொகுத்து வழங்கிய அந்த மேடையிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பார்வையாளர்களின் வாக்களிப்பின் மூலம் தான் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவாரே தவிர, பெற்றோரின் விருப்பத்திற்காக உடனடியாக அவரை வெளியேற்ற முடியாது என்று மோகன்லால் விளக்கம் அளித்தார். மேலும். பெற்றோரின் தொடர்ச்சியான கோரிக்கையின் அடிப்படையில் தான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !