உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்ச்சை கருத்து : இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

சர்ச்சை கருத்து : இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த 2025 ஏப்ரலில் ஹிந்தியில் வெளியான 'புலே' என்கிற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அது குறித்து ஒரு நபரிடம் சோசியல் மீடியாவில் விவாதம் செய்தபோது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை சொல்லி அப்படி இருப்பதன் மூலம் நீங்கள் என்ன சாதித்துவிட்டீர்கள்? என்று விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார் அனுராக் காஷ்யப். இவரது கருத்து ஒட்டுமொத்த அந்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, வக்கீல் கமலேஷ் ராவல் என்பவர் சூரத் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் சார்பில் பலமுறை ஆஜராகும்படி அனுராக் காஷ்யப்பிற்கு சமன்கள் அனுப்பப்பட்டும், அவர் தொடர்ந்து நேரில் ஆஜராகத் தவறினார். இதனைத் தொடர்ந்து, சூரத் கூடுதல் தலைமை நீதிபதி ஜே.வி.சவுகான், அனுராக் காஷ்யப்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்த விவகாரம் பெரிதான சமயத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, கோபத்தில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டதாக கூறி அனுராக் காஷ்யப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஆனாலும், நீதிமன்ற நடைமுறைகளில் அவர் ஆஜராகாததால் தற்போது இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !