உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் காலை 6 மணி காட்சி... ஒரு வாரத்திற்கு தினமும் 6 ஷோ: முதல்வர் விஜய் அனுமதி

மீண்டும் காலை 6 மணி காட்சி... ஒரு வாரத்திற்கு தினமும் 6 ஷோ: முதல்வர் விஜய் அனுமதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள், பண்டிகை நாட்கள் என அதிகாலை காட்சிகள், காலை 6 மணி காட்சிகள் என சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. 2023ல் பொங்கலுக்கு வந்த அஜித் நடித்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது ரசிகர்கள் லாரி மீது ஏறி நடனமாடி கொண்டாடியபோது, ஒரு ரசிகர் கீழே விழுந்து இறந்தார். அதன்பின், அதிகாலை காட்சி, 6 மணி காட்சிகளுக்கு அப்போதைய திமுக அரசு தரப்பில் அனுமதி மறுத்தது. முன்னணி நடிகர்களின் படங்கள், பண்டிகை நாட்களில் காலை 9 மணி காட்சிக்கு மட்டும் அனுமதி கொடுத்து ஒரு நாளைக்கு 5 ஷோ திரையிட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, புதிய படங்கள் அனைத்தும் வெளியான ஒரு வாரத்திற்கு காலை 9 மணி காட்சிகளை திரையிடலாம் என அறிவித்தது. இது தற்போது வரை தொடர்ந்து வந்த நிலையில், இன்று (நவ.,3) புதிய அறிவிப்பை தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனிமேல் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் புதிய தமிழ் படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து நள்ளிரவு 02.30 மணி வரை திரையிட அனுமதியளித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கையின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-11-03 21:02:25

அசம்பாவிதம் நடந்தால் பல்டி அடிப்பது உறுதி