உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமையல் கலைத் துறைக்கு பேரிழப்பு : செப் தாமு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

சமையல் கலைத் துறைக்கு பேரிழப்பு : செப் தாமு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு (72) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மகள் வெளிநாட்டில் இருந்து வர வேண்டியிருப்பதால் இறுதிச்சடங்கு நாளை(அக்., 26) நடைபெற உள்ளது.

முதல்வர் விஜய் இரங்கல்

செப் தாமு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛பிரபல சமையல் கலைஞர் செப் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !