உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / "குடும்பங்களுக்குப் பிடிக்கும் என்கிற கோணத்தில் படங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை" : நிவின்பாலி ஓபன் டாக்

"குடும்பங்களுக்குப் பிடிக்கும் என்கிற கோணத்தில் படங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை" : நிவின்பாலி ஓபன் டாக்

மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி, ஆரம்பத்தில் ரசிகர்களைக் கவரும் விதமாக வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.. ஒரு கட்டத்தில் கதை அம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன் என கதைகளைத் தவறாகத் தேர்வு செய்து சரிவைச் சந்தித்தார். இந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான சர்வம் மாயா, திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்து 100 கோடி வசூலித்தது.

இந்த வருடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலித்து, மலையாளத்தில், அதிக வசூல் செய்த படம் என அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இரண்டு படங்களுமே இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்கள் அனைவருமே பாராட்டித் கொண்டாடிய படம் தான்; அதனால் தான் அவ்வளவு பெரிய வசூலை அது ஈர்த்தது.

நிவின்பாலி இது பற்றிக் கூறும்போது, நான் எப்போதுமே இது குடும்பங்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், ஒரே குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞர், பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி என ஒவ்வொரு வயதினரும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு படத்தைப் பார்க்கிறார்கள். அதனால் எப்போதுமே ஒரு கதையின் கதாபாத்திரம் மற்றும் கதை மீது எனக்குள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தப்படங்களின் வெற்றியை பார்த்தாவது அவர் தனது பாணியை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கலாம்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !