உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டியை யானையுடன் ஒப்பிட்ட மியா ஜார்ஜ்

மம்முட்டியை யானையுடன் ஒப்பிட்ட மியா ஜார்ஜ்

மலையாள நடிகை மியா ஜார்ஜ் தமிழில் வெற்றிவேல், இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து 'தி கிரேட் பாதர்', 'பரோல்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் டப்பிங் ஸ்டூடியோ ஒன்றுக்கு சென்றிருந்தபோது, அங்கே தற்செயலாக மம்முட்டியைச் சந்தித்த மியா ஜார்ஜ், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதைத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மியா ஜார்ஜ், யானையையும் மம்முட்டியையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை பார்க்க பார்க்க திகட்டாதது யானை, கடல், ரயில் என்பார்களே, அதில் மம்முட்டியையும் இணைந்து விட்டார் போலும். மம்முட்டியுடன் இந்த புகைப்படத்தைத் தனக்குப் படம் பிடித்துக் கொடுத்த நடிகரும் இயக்குநரும் ஆன மம்முட்டியின் நண்பர் ரமேஷ் பிஷாரடிக்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார் மியா ஜார்ஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !