'சீன்' படத்தில் கண் பார்வை இல்லாத வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா?- ஜீத்து மாதவன் அளித்த விளக்கம்
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சீன்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்விற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் மற்றும் படத்தின் கதைக்களம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது, இப்படத்தில் சூர்யா பார்வையற்ற ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்து வில்லனாக நடிக்கும் நஸ்லெனை அழிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், இப்படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் வெளியிட்டுள்ள செய்தியில், சூர்யா இப்படத்தில் பார்வையற்றவர் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ''முன்னாள் காவல் அதிகாரி ஒருவர், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர விரும்புகிறார். ஆனால் அவருக்கு எந்த ஆதரவும் இல்லை. அதனால், அவர் சற்று வித்தியாசமான மனிதர்களைக் கொண்ட ஒரு சொந்தக் குழுவை உருவாக்குகிறார். அவர்களில் யாருமே சாதாரணமானவர்கள் இல்லை. அவர்கள் ஒன்றாக வாழ்வதே ஒரு சவால். அவர்களை ஒன்றாகச் செயல்பட வைத்து ஒரு வழக்கைப் புலனாய்வு செய்ய வைப்பது அதைவிடப் பெரிய சவால். இந்தப் புலனாய்வையும், வழியில் ஏற்படும் சுவாரஸ்யமான குழப்பங்களையும் சுற்றியே படம் நகர்கிறது. குடும்பங்கள் ரசித்து மகிழும் ஒரு பொழுதுபோக்குத் கதையைச் சொல்ல விரும்பினோம், அதை முடிந்தவரை பொழுதுபோக்காக மாற்ற முயற்சித்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
இந்த சீன் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்- 2' படத்துடன் நவம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.