உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே வாரத்தில் ரூ.549 கோடி: 'ஜெயிலர் 2' வசூல் சாதனை

ஒரே வாரத்தில் ரூ.549 கோடி: 'ஜெயிலர் 2' வசூல் சாதனை


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி ரிலீசானது. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, யோகிபாபு, மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வசூலை இதுவரை வெளியிடாத படக்குழு, தற்போது ஒரு வாரத்திற்கான வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, முதல் ஏழு நாளில் இப்படம் உலகளவில் 549 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஒரு வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. இதே வேகத்தில் செல்லும்பட்சத்தில், தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவித்த படமான '2.0' படத்தின் ரூ.800 கோடி சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !