'ஜெயிலர் 2'வில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் சம்பளமே வாங்கவில்லையா?
ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'ராட்டி' என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது ரூ. 600 கோடியை நெருங்கி வருகிறது. ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் 650 கோடி வசூலித்த நிலையில் இப்படம் அதையெல்லாம் கடந்து 1000 கோடியை எட்டிப்பிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இப்படத்தில் இணைந்துள்ள பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது சிறப்புத் தோற்றத்திற்காக ரூ. 25 கோடி ஊதியம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போதைய புதிய தகவல்களின்படி, ரஜினிகாந்த் மீதான மரியாதையின் காரணமாக இப்படத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் எந்தக் கட்டணமும் பெறாமல் இலவசமாகவே நடித்ததாகக் கூறப்படுகிறது. ஹிந்தியில், 1986ல் ரஜினி நாயகனாக நடித்த 'பகவான் தாதா' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷன் 12 வயது சிறுவனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.