உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழை கண்டு கொள்ளாத 'ரணபாலி' குழு

தமிழை கண்டு கொள்ளாத 'ரணபாலி' குழு

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள தெலுங்குத் திரைப்படம் 'ரணபாலி'. பான் இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

பான் இந்தியா படமாக வெளியானாலும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை ஐதராபாத்தில் மட்டும் பிரம்மாண்டமாக நடத்தினார்கள். மற்ற மொழிகளில் பத்திரிகையாளர் சந்திப்புகளைக் கூட நடத்தவில்லை. பத்திரிகையாளர் காட்சியும் நடத்தாமல் ரத்து செய்துள்ளார்கள்.

இன்று படம் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்த்தவர்கள் படத்திற்கு மிகச் சுமாரான வரவேற்பையே கொடுத்துள்ளனர். மிகவும் மெதுவான திரைக்கதை படக்குழுவினரின் உழைப்பை வீணடித்துள்ளதாக ஒட்டுமொத்தமாக கருத்துக்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஆகியோரது திருமணத்திற்குப் பிறகு வெளிவந்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 'ஜெயிலர் 2' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் 'ரணபாலி'க்கு வெற்றிகரமான 'ரன்' கிடைக்காது என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !