உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களுக்கு ஓடிடியில் பல ஹிட் படங்களுடன் காத்திருக்கும் ஆயுதபூஜை கொண்டாட்டம்...!

ரசிகர்களுக்கு ஓடிடியில் பல ஹிட் படங்களுடன் காத்திருக்கும் ஆயுதபூஜை கொண்டாட்டம்...!

வார வாரம் ஓடிடியில் புதியப்படங்கள் வெளியாகும் நிலையில், ஆயுத பூஜை விடுமுறையையொட்டி வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

டிசி
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்த திரைப்படம் 'டிசி'. இந்த படம் ஏற்கனவே சன் நெக்ஸ்ட்டில் வெளியான நிலையில் இன்று சோனி லைவ்வில் வெளியாகியுள்ளது.

என்ன விலை
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவக்குமார், கமலேஷ் ஜெகன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' என்ன விலை'. மீனவருக்குக் கிடைக்கும் தங்கப் பதக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், நேற்று நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

ஆஷா
மலையாள இயக்குநர் சபர் சனல் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்ய லட்சுமி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஆஷா'. த்ரில்லர் கதையம்சத்துடன் வெளியான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று ஜீ5யில் வெளியாகியுள்ளது.

காப்பி ஸ்குவாட்
மலையாள இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல் இயக்கத்தில், ரினோஷ் ஜார்ஜ், அனஹா அஜித், தியா தீபன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'காப்பி ஸ்குவாட்'. இந்த தொடர் நேற்று முன்தினம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்
மலையாள இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கத்தில், சங்கீத் பிரதாப், ஷராபுதீன், அகிலா பார்கவன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ' இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்'. இந்த திரைப்படம் நேற்று முன்தினம் சிம்பிளி சவுத்தில் வெளியாகியுள்ளது.

காகிதம் படவாலு
தெலுங்கு இயக்குநர் எம்.ஜி.ஆர். துக்காராம் இயக்கத்தில், வர்தன் குர்ராலே, கிருஷ்ண பிரியா பிரேம் சாகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'காகிதம் படவாலு'. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம், இன்று சன் நெக்ஸ்ட்டில் வெளியாகியுள்ளது.

ஒரு அன்வேஷனத்தின் துடக்கம்
மலையாள இயக்குநர் எம்.எ. நிஷாந்த் இயக்கத்தில், ஷைன் டாம் சாக்கோ, ஸ்வாசிகா விஜய், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் 2024ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ' ஒரு அன்வேஷனத்தின் துடக்கம்'. இந்த திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட்டில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !