வாசகர்கள் கருத்துகள் (1)
ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு நமோ நாராயணாவும் முக்கிய காரணம்
‛நாடோடிகள், ரஜினி முருகன், மருது' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமோ நாராயணா. தற்போது வெளியாகி உள்ள ரஜினியின் ‛ஜெயிலர் 2' படத்தில் முக்கிய வேடத்தில் காமெடியில் அசத்தி இருக்கிறார். படத்தின் முதல்பாதியில் இவரது பங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருப்பதோடு, அவருக்கு பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.
அவர் அளித்த பேட்டி : ‛‛எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் பெரிதும் இல்லை. நான் வெளிநாட்டில் ஐடி தொழிலில் வேலை செய்து கொண்டிருந்தேன். சமுத்திரகனி மூலம் ‛நாடோடிகள்' படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு சசிகுமார் கூட சில படங்கள் நடித்தேன். ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளேன், டிரைலரில் அவரோடு என்னை பார்த்த பிறகு பலரும் சந்தோஷமா பேசுகின்றனர். எனக்கு நடிக்க வேண்டும் என்பதில் ஆசை இல்லை, என்றாலும் நான் நடித்த சில படங்கள் பேசப்பட்டது.
ஜெயிலர் 2 படம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள், நான் ரஜினியுடன் நடிப்பேன் என்று என் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அவரோடு நடித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தையும், மனநிறைவையும் தருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும், எப்படி பழக வேண்டும், எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை ரஜினி மூலம் தெரிந்து கொண்டேன். எத்தனை வெற்றி பெற்ற பிறகும் மனிதன் இயல்பாக இருக்கிறார். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்'' என்றார் நமோ நாராயணா.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு நமோ நாராயணாவும் முக்கிய காரணம்