உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர்-2' - தலைவர் காட்டுத் தீயைப் பற்ற வைக்கிறார்! : கார்த்திக் சுப்பராஜ்

'ஜெயிலர்-2' - தலைவர் காட்டுத் தீயைப் பற்ற வைக்கிறார்! : கார்த்திக் சுப்பராஜ்


2023ல் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து, 'ஜெயிலர் 2' மூலம் ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனர் நெல்சனுடன் இணைந்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும், ஓய்வு பெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனாக மீண்டும் களமிறங்கியுள்ளார் ரஜினி. முதல் பாகத்தின் சம்பவங்களைத் தொடர்ந்து, ஒரு பெரிய குற்றப் பின்னணி கொண்ட கும்பலை விசாரிக்க அவர் மீண்டும் களத்திற்கு வருகிறார். ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து இப்படம் பெருமளவில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தனுஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று என விவரித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தலைவர் திரையில் காட்டுத் தீயைப் பற்றவைக்கிறார். அவரிடமிருந்து என் கண்களை எடுக்கவே முடியவிலை. லவ் யூ தலைவா. சிலிர்க்க வைக்கும் அதிரடி விருந்து. நெல்சனின் எழுத்து இயக்கம் மற்றும் அனிருத்தின் இசை ஒவ்வொரு பிரேமிலும் அதிவேக ஆற்றலை மூச்சாக பாய்ச்சுகிறது.

அதேபோல், மிதுன் சார், மோகன்லால் சார், சிவராஜ்குமார் சார், ஜாக்கி ஷெராப் சார், வித்யா பாலன் மேடம், ஹிருத்திக் சார் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சார் - இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் பார்ப்பது எவ்வளவு அற்புதமான தருணம். உச்சக்கட்ட பொழுதுபோக்கு. திரையரங்குகளில் எங்களுக்கு இப்படி ஒரு பிளாக்பாஸ்டர் விருந்தை அளித்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், மிர்ணா மேனன், யோகி பாபு மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். புதியவர்களாக எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, ஜடின் சர்மா, மேக்னா ராஜ் சர்ஜா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !