'பெளசி' பட நாயகி இமான்வியின் பிறந்த நாளில் பிரபாஸ் கொடுத்த சுவையான ஆச்சரிய பரிசு!
பிரபாஸ் தற்போது நடித்து வரும் 'பெளசி' என்ற படத்தில் அறிமுகமாகிறார் இமான்வி. அவர் நேற்று முன்தினம் தனது 31வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்நிலையில் பிறந்தநாளில் அவருக்கு ஒரு ஆச்சரியமான பரிசை அனுப்பி வைத்துள்ளார் பிரபாஸ்.
அதாவது, இமான்விக்கு பல்வேறு வகையான உணவுகள் அடங்கிய ஒரு சிறப்பு விருந்தளித்துள்ளார் பிரபாஸ். அவர் தனக்கு அனுப்பிய அனைத்து உணவுகளின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இமான்வி. அந்த மேஜை, பிரியாணி, புலாவ் மற்றும் பல்வேறு ஸ்டார்ட்டர்கள் உள்ளிட்ட ஐதராபாத் விருந்தளிப்பால் நிரம்பியிருந்தது. இந்த உணவுக் கலவையில் சிக்கன் 65, சில்லி சிக்கன், சீக் மற்றும் ஷமி கபாப்கள், மற்றும் தந்துரி சிக்கன் ஆகியவை இடம்பெற்றிருந்தன. மேலும், பல்வேறு குழம்புகள், கிரேவிகள், சலான், ராய்தா மற்றும் சட்னிகளுடன், அப்ரிகாட் டிலைட் மற்றும் பிர்னி போன்ற இனிப்பு வகைகளும் இடம்பெற்றிருந்தன. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் 'பெளசி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.