சந்தீப் கிஷனின் 'கரிகாலா' படத்தில் கேத்ரின் தெரசா
ADDED : 10 hours ago
'சிக்மா' படத்தை தொடர்ந்து சந்தீப் கிஷன் நடித்து வரும் படம் 'கரிகாலா'. ஷைனிங் பிக்சர்ஸ் தயாரிப்பில் உகந்தர் முனி இயக்கத்தில் சந்தீப் கிஷனின் 33வது படமாக உருவாகும் இப்படம் பேண்டசி ஜார்னரில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் அடுத்தாண்டு ஜூலை 2ம் தேதியும், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு அக்டோபர் 28ம் தேதியும் வெளியாகிறது.
பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிகை கேத்ரின் தெரசா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் சந்தீப் கிஷன் நடித்த 'சிக்மா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் கேத்ரின் தெரசா.